இலங்கை போக்குவரத்து சபையினால் திட்டமிடப்பட்டுள்ள விசேட பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து நாளொன்றில் வழமையாக போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் பஸ்களுக்கு மேலதிகமாக, 150 தொடக்கம் 200 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல, தமிழ் – சிங்கள புதுவருடத்தின் பின்னர் கொழும்பிற்கு வருகை தரும் பயணிகளின் நலன் கருதி விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இந்த காலப்பகுதியில் விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. தூர பிரதேசங்களுக்கான ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில்களில் மேலதிக பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரைக்கும், பதுளைக்கும் மாலை நேரங்களில் விசேட கடுகதி ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வார இறுதி நாட்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், கரையோர ரயில் போக்குவரத்தில் மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன எனவும் தெரிவித்தார்..
Post a Comment