கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் ஒரே நாளில் அச்சிடப்பட்ட மிகப் பெரிய தொகை இதுவாகும். அத்தொகை 85.3 பில்லியன் ரூபாவாகும்.
அரச செலவினங்களை ஈடுசெய்ய மேலும் ஒரு ரில்லியன் ரூபாவை அச்சிட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ள பின்னணியில் இத்தொகை அச்சிடப்பட்டுள்ளது.
பிரதமர் எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கம் 40% ஐ தாண்டும் எனச்
சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேநேரம் அரசாங்கம் வரிகளை அதிகரிக்காவிட்டால் அரசாங்க செலவினங்களுக்கு பணத்தை அச்சிட வேண்டியிருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க முன்னர் தெரிவித்திருந்தார்.
இலங்கை மத்திய வங்கி 2022 இல் இதுவரை 572 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட பணத்தின் நிலையான அளவு 1.2 டிரில்லியன் ரூபாயாகும். 2020 ஆம் ஆண்டில் அது 650 பில்லியன் ரூபாயாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment