நூலகம் எரியூட்டப்பட்ட வேளை நூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியில் சுமார் 57,000 நூல்களும், சிறுவர் பகுதியில் 8,995 நூல்களும், உசாத்துணை பகுதியில் கிடைத்தற்கரிய 29,500 நூல்களும் இருந்தன. இவை அனைத்தும் தீயினால் எரிக்கப்பட்டு சாம்பராக்கப்பட்டது.
கவர்ந்து செல்லவோ, சூறையாடவோ முடியாத தெற்காசியாவின் அறிவுப் பொக்கிஷத்தை துவம்சம் செய்த துன்பியல் அனுபவத்தை வார்த்தைகளில் சொல்வது அத்துணை எளிதன்று.
1933ஆம் ஆண்டிலிருந்து பெரு விருட்சமாய் யாழ். நூலகமாய் நிமிர்ந்து நின்றது.
1800 களில் யாழில் தகவல் தந்த செய்தி ஏடுகள், தொன்மை வாய்ந்த வரலாற்று ஆவணங்கள் மற்றும் புராதன பறைசாற்றும் ஓலைச்சுவடிகளை உள்ளடக்கி எம்மவரின் உணர்வுகளின் எழுத்துருவாய் வீறுடன் எழுந்து நின்ற யாழ். நூலகம் எரியூட்டப்பட்ட நாள் எங்கள் வாழ்வியலில் கரிநாளாகும்.
புனரமைக்கப்பட்ட யாழ். பொது நூலகம் இன்று மீண்டும் கம்பீரமாக காட்சியளிப்பதுடன், வாசகர்களின் அறிவுப்பசியினை போக்கி வருகின்றது.

Post a Comment