Ads (728x90)


நாட்டின் பொருளாதாரத்தை நிச்சயம் கட்டியெழுப்புவேன் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , 'கோட்டா கோ கம' மீது கைவைக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் கொள்ளுபிட்டியவில் உள்ள கங்காராம விகாரையில் விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொருளாதாரத்தை நிச்சயம் கட்டியெழுப்ப வேண்டும். காரணம் மக்கள் மிகுந்த நெருக்கடியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எதிர்வரும் சில மாதங்களில் இதனை விட பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். எவ்வாறிருப்பினும் நாம் அதிலிருந்து மீள வேண்டும். அவ்வாறு மீளெழுவதற்காகவே நான் பதவியேற்றிருக்கின்றேன்.

எவ்வாறிருப்பினும் எமக்கு இதனை தனியாக செய்ய முடியாது. ஏனைய நாடுகளிடமிருந்தும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மீண்டும் மூன்று வேளையும் உணவுண்ணும் இனமாக வேண்டும். ரூபாவிற்கென பெறுமதி இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு எதிர்காலமொன்று வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget