Ads (728x90)

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை திரும்பியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கான மாற்றுத் தீர்வாக விமான நிறுவனங்கள் சென்னை, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்படும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Post a Comment

Recent News

Recent Posts Widget