Ads (728x90)

நாட்டின் பலபகுதிகளிலும் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இன்று காலை வரை 1,878 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 இவர்களில் 831 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த 09 ஆம் திகதி இடம்பெற்ற 854 வன்முறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய இன்று வரை  1,878 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.





Post a Comment

Recent News

Recent Posts Widget