ஆயிரக்கணக்கான மக்கள் இப்பேரணியில் கலந்து கொண்டமையால் சுதந்திர சதுக்கத்திற்குச் செல்லும் வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பின. இதனால் அவ்வழியூடான சகல போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்தது.
கொழும்பு - கெம்பல் பார்க் பகுதியில் ஆரம்பமான ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி பின்னர் அங்கிருந்து பொரளை, கொழும்பு - தேசிய வைத்தியசாலை சந்தியூடாக தாமரை தடாக பிரதேசத்தைக் கடந்து சுதந்திர சதுக்கத்தை சென்றடைந்தது.
'சுதந்திரத்திற்கான போராட்டம்' என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியினால் .இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Post a Comment