Ads (728x90)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அலரி மாளிகைக்கு வந்த ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்கள் நடாத்திய தாக்குதலின் விளைவாக நாடு முழுவதும் அமைதியின்மைச் சம்பவங்கள் ஏற்பட்டமை தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பிலுள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு அருகில் 'மைனா கோ கம' மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் 'கோட்டா கோ கம' ஆகிய அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மே 09ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுபிட்டி பகுதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் பிரதமரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் 03 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



Post a Comment

Recent News

Recent Posts Widget