Ads (728x90)

சீரற்ற வானிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாமையாது உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் இன்று மறுஅறிவிப்பு வரை காத்திருக்கும் படியும், தேவையில்லாமல் எரிவாயுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை கேட்டுள்ளது.

இன்று முதல் சமையல் எரிவாயு விநியோகப் பணிகளை மீள ஆரம்பிப்பதாக லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.

இதன்படி நாளாந்தம் 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து 2,800 மெட்ரிக் தொன் எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டன. எனினும் சீரற்ற வானிலை காரணமாக முழுமையாக தரையிறக்கும் பணிகள் தடைப்பட்டுள்ளன.

மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளை வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget