அரசமுறை கடன்களை மீளச்செலுத்த முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் விரைவாக செலுத்துவதற்கு ஒரு மில்லியன் கூட தற்போது கைவசமில்லை. பல ஆவணங்களின் உள்ளடக்கம் தவறாக உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
கடன் நிலைமை முறிவடையும் நிலை தொடர்பிலான முழுமையான அறிக்கையை எதிர்வரும் வாரம் சபையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.
பாராளுமன்றில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா அரச முறை கடன் செலுத்த முடியாத நிலைமை தொடர்பில் பிரதமரிடம் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச முறை கடன் மீள் செலுத்தல் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச மட்டத்திலான நிதி மற்றும் நிதி ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நிபுணர்கள் குழு இதுவரை நியமிக்கப்படவில்லை அக்குழு எப்போது நியமிக்கப்படும் என ஹர்ஷ டி சில்வா பிரதமரிடம் கேள்விகளை முன்வைத்தார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான நிபுணர் குழு வெகுவிரைவில் நியமிக்கப்படும் என பிரதமர் பதிலளித்துள்ளார்.

Post a Comment