Ads (728x90)

நாட்டில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு நாளை திங்கட்கிழமை முதல் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி கல்வி அமைச்சு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து சிரமங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை பாதிக்காத நிலையில் பிரதேச மட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்த மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்குச் செல்ல முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்தாலோசித்து, அந்த நிலையிலும் பாடசாலையை பராமரிக்க முடியுமாயின் உரிய நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.




Post a Comment

Recent News

Recent Posts Widget