எதிர்வரும் புதன்கிழமை பெற்றோலும், வியாழக்கிழமை டீசலும் கொண்ட கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் தெரிவித்தார்,
அத்துடன் சாலை அனுமதிப்பத்திரம் கொண்ட தனியார் பஸ்களுக்கு, இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்களின் ஊடாக எரிபொருளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் நிற்க வேண்டாமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள், சுற்றுலா சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கும், தமக்கு அருகில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போக்களின் ஊடாக எரிபொருளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியர்கள், பொலிஸார் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு அடுத்த வாரம் முதல் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வௌ்ளிக்கிழமைகளில் எரிபொருள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முழுமையாக போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்களுக்கு அவற்றின் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்திற்கமைய குறிப்பிட்ட தினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment