Ads (728x90)

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு அதிகபட்ச ஒத்துழைப்புகளை நெருங்கிய நண்பர் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் வழங்கும் என இந்திய வௌியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய தூதுக்குழுவினர் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த போதே வினய் குவாத்ரா இதனை கூறியுள்ளார்.

இந்திய கடனுதவியின் கீழ் எரிபொருள், மருந்துப்பொருட்கள், உரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் மீளாய்வு செய்த இந்திய தூதுக்குழுவினர், இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு இந்திய அரசு அர்ப்பணிப்புடன் உள்ளதாக கூறியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய செயற்றிட்டங்கள் குறித்து இரு தரப்பிற்கும் இடையில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget