Ads (728x90)

கால்நடைகளின் உணவு உற்பத்திக்காக அரிசி மற்றும் நெல்லை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயன்படுத்துவதை தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

இவ்விசேட வர்த்தமானி அறிவித்தலின் படி கால்நடைகளின் உணவு உற்பத்திக்காக அரிசியை விற்பனை செய்தல் அல்லது சேமித்து வைப்பது மற்றும் கொண்டு செல்வது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடரும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget