Ads (728x90)

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் எரிபொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல்  விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 470 ரூபா ஆகும்.

ஒரு லீற்றர்  95 ஒக்டேன் பெற்றோலின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 550 ரூபா ஆகும்.

ஒரு லீற்றர்  ஒட்டோ டீசலின் விலை 60 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்படி ஒரு லீற்றர் டீசலின் புதிய விலை 460 ரூபா ஆகும்.

ஒரு லீற்றர்  சுப்பர்  டீசல் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றர்  சுப்பர் டீசலின் புதிய விலை 520 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளின் விலையை அதிகரித்ததைத் தொடர்ந்து லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 470 ரூபா ஆகும்.

ஒரு லீற்றர்   95 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 550 ரூபாவாகவும், ஒரு லீற்றர்  ஒட்டோ டீசலின் புதிய விலை 490 ரூபாவாகவும், ஒரு லீற்றர்  சுப்பர்  டீசலின் புதிய விலை 520 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget