Ads (728x90)

இலங்கை பிரஜை ஒருவர் அல்லது இலங்கையில் வசிக்கும் ஒருவர் தம்வசம் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டு உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேற்படி நிபந்தனைகள் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றது. 16 ஆம் திகதிக்கு முன்னர் 14 நாட்களுக்கு பொது மன்னிப்பு காலத்தை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் மேலதிக பணத்தை தனிப்பட்ட வெளிநாட்டு நாணய கணக்கில் அல்லது வியாபார வெளிநாட்டு நாணய கணக்கில் வைப்பிலிட அல்லது அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற வர்த்தக வங்கி, தேசிய சேமிப்பு வங்கிக்கு விற்பனை செய்ய முடியும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

புதிய விதிகளை மீறுவோருக்கு எதிராக அந்நிய செலாவணி சட்டத்தின் விதிகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget