மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களுக்கான விலை அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் வியாபாரிகள் அத்தியாவசிய பொருட்களை மிகவும் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
அரசாங்கம் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளது. அந்த நிர்ணயவிலைக்கு உட்பட்ட வகையில் பொருட்களினை விற்கவேண்டும். சில்லறை விற்பனையாளர்களும் இந்த விடயத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும். அரிசியை அதிக விலைக்கு விற்று மக்களை கஷ்டத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.
அதே நேரத்தில் அரசாங்கம் நிர்ணயித்த விலையானது நியாயமான விலையாக காணப்படுகின்றது. யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரின் கண்காணிப்பின் மூலம் கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசியை விற்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
எனவே பொதுமக்களுக்கு கஷ்டம் ஏற்படுத்தாதவாறு அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம் என யாழ்.வர்த்தக சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
Post a Comment