Ads (728x90)

அரச நிறுவனமான ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நாட்டின் அரச இயந்திரங்களுக்கு பாரிய நிதிச்சுமையாக இருப்பதால் தேசியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதகமான பாதிப்பில் அரசாங்கம் தலையிடுமாறு கோப் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் மூன்றாவது அறிக்கையை நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலை மற்றும் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக மூன்று உப குழுக்களை நியமித்துள்ளதாகவும் அந்த குழுக்களின் அறிக்கைகளும் கோப் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோப் அறிக்கையில், இலங்கை கால்பந்து சம்மேளனம், காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகள் தொடர்பிலான தகவல்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்



Post a Comment

Recent News

Recent Posts Widget