நாட்டில் நிலவும் நெருக்கடிகளின் விளைவாக இவ்வாண்டு கல்விச் செயற்பாடுகள் திட்டமிட்டபடி முழுமையாக நடைபெறாமையால் ஆகஸ்ட் மற்றும் டிசம்பரில் வழமையாக வழங்கப்படும் தவணை விடுமுறைகள் இம்முறை வழங்கப்படமாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே குறித்த காலப்பகுதியில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனினும் இவ்வாண்டுக்கான க.பொ.தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் போது மாத்திரம் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Post a Comment