Ads (728x90)

எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தனது சேவையை ஆரம்பிக்கும் என விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா யாழில் வைத்து தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை பார்வையிட்ட அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் தெரிவித்தார்.

அத்தோடு புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக விமானமூடாக வருகை தர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget