தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது.
வேர்க்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி இருக்கின்றது.
இதனை தினமும் ஒரு கைபிடி அளவு எடுத்துக் கொண்டால் உடலில் பல மாற்றங்களை எம்மால் உணர முடியும்.
மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இது தவிர பொஸ்பரஸ், தையாமின், நையாசின் ஆகிய சத்துக்களும் வேர்க்கடலையில் அடங்கியுள்ளன.
இதில் உள்ள எண்ணெய்ச் சத்து எளிதில் ஜீரணமாகக் கூடியது. சிறந்த மலமிளக்கியாகவும், சருமத்துக்குப் பளபளப்பு ஊட்டக்கூடியதாகவும் விளங்குகிறது. இதனைச் சாப்பிடுவதால் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் குணமாகும்.
வேர்க்கடலையில் தேவையான அளவு நல்ல கொழுப்புகள் அதிக அளவு உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் கரைத்து உங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலையை கொடுத்து வந்தால் அவர்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
வேர்க்கடலையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. முக்கியமாக இதனை அவித்து உண்ணும்போது ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் சக்தி இன்னும் பெருகுகின்றது. உங்கள் உடலில் ஏற்படும் பிரீ ராடிக்கல் செல் அழிவினை ஏற்படாமல் காக்க ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் முக்கிய பங்கினை வகிக்கின்றது.
வேர்க்கடலையில் அதிக அளவு வைட்டமின் இ மற்றும் புரதம் நிறைந்துள்ளது. உங்களின் சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் இ மிக மிக முக்கியமான ஒன்றாகும். மேலும் ப்ரோடீன் மற்றும் வைட்டமின் இ உங்களுக்கு ஆரோக்கியமான சருமத்தினை அளிக்கின்றது.
வேர்க்கடலையில் அதிக அளவு கல்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வரும்போது உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. மேலும் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றது.
முடி கொட்டுதல் பிரச்சினை முற்றிலுமாக கட்டுக்குள் இருக்கும். மேலும் உங்களுக்கு ஆரோக்கியமான முடி வளர வழி வகுக்கும்.
Post a Comment