Ads (728x90)

நாடு முழுவதும் நாளை மறுதினம் 20ம் திகதி தொடக்கம் தேசிய எரிபொருள் அட்டைக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தொிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் டபிள்யு.எஸ்.எஸ். பெர்னாண்டோ சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்வதை 20ம் திகதிவரை பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர பதிவு நடவடிக்கை நிறைவு பெறும் வரை புதிய எரிபொருள் விநியோகிக்கப்படாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்துக்கு அமைய எதிர்வரும் வியாழக்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்படும். அதனால் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் இருப்பதில் பயன் இல்லை. கியூ.ஆர். கோட் மற்றும் வாகனத்தின் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படும்.

எனவே தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் இருப்பவர்கள் அந்த இடத்தில் இருந்து விலகிச் செல்லுமாறும் கேட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget