இன்று நாடாளுமன்றில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களைக் கையளிக்குமாறு நடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்கவினால் அறிவித்தல் விடுக்கப்படும்.
அதன் பின்னர் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கட்சியின் வேட்பாளர்களை முன்மொழிவர். இதனை மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் வழிமொழிவர்.
இதன்போது தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர், பரிந்துரை முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் சபையில் பிரசன்னமாகியிருக்க வேண்டியது அவசியமாகும்.
அதன் பின்னர் வேட்பாளர் தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்க வேண்டும்.
ஜனாதிபதியை தெரிவு செய்யும் சட்டத்திற்கு அமைய சபாநாயகர் தவிர்ந்த 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவரேனும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியும். ஒன்றிற்கு மேற்பட்ட வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் நாளை வாக்கெடுப்பு இடம்பெறும்.
Post a Comment