ரணில் விக்ரமசிங்வைத் துரத்தும் வரை தொடர்ச்சியாகப் போராடப்போவதாகவும், அடக்குமுறைகளைமீறி அப்போராட்டம் தொடரும் எனவும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் விசேட செய்தியாளர் சந்திப்பில் நேற்று அறிவித்துள்ளனர்.
நேற்று 102 ஆவது நாளாகவும் காலிமுக்ததிடலில் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் தொடர்ந்த நிலையில் பாராளுமன்றம் 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவைத் தெரிவுசெய்ததுடன் தன்னெழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள போராட்டக்காரர்கள் இணைந்து ஊடக சந்திப்பொன்றை நடாத்தியுள்ளனர்.
Post a Comment