Ads (728x90)

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தாமலுள்ள 100 பஸ்களை வாடகை அடிப்படையில் பெற்று பயன்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை வாகனங்களின் கட்டணங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் இன்று பாராளுமன்றில் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை குறித்த பஸ்களில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி புதிதாக ஓட்டுநர்களை பணிகளில் சேர்த்துக்கொள்ளும் அதேநேரம் பெண் நடத்துநர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

முதலில் மாதிரி திட்டமாக கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் வரும் காலங்களில் காலி, மாத்தறை போன்ற இடங்களுக்கும் விஸ்தரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget