பதவி விலகுவதாக அறிவித்த இவங்கை ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட முயல்கின்றார் என்ற ஊகங்களிற்கு மத்தியில் அவரது விசா கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக உயர் அதிகாரி மூலம் அறியமுடிவதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
முன்னர் அமெரிக்க பிரஜையாக காணப்பட்ட கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டு பிரஜை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டார்.
பொதுமக்களின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக செல்வதற்கான விசா அனுமதியை கோரினார். ஆனால் அது மறுக்கப்பட்டது என உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Post a Comment