Ads (728x90)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாடு செல்ல முயற்சித்ததாகவும், விமான நிலைய அதிகாரிகளின் எதிர்ப்பையடுத்து அவர் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் ஏ.எப்.பி.சர்வதேச செய்தி சேவை உயர்மட்ட பாதுகாப்பு தரப்பினரை மேற்கொள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய நேரத்தில் இருந்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எங்கு தங்கியுள்ளார் என்பது வெளிப்படுத்தப்படாத நிலையில் இந்த தகவல்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் அச்செய்தியின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ஷ விமான நிலையத்தோடு இணைந்ததாக அமைந்துள்ள கட்டுநாயக்க விமான படை தளத்தில் இருந்து வெளிநாடு செல்லும் முயற்சிகளில் ஈடுப்பட்டதாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், அவருக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள், இரு வர்த்தகர்கள் என 17 பேர் மத்தள விமான நிலையம் ஊடாக தப்பிச்செல்ல முயற்சிப்பதாகவும், தனியார் ஜெட் விமானம் ஊடாக அவர்கள் இவ்வாறு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸாரை அரசியல் பிடியில் இருந்து மீட்கும் அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget