Ads (728x90)

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 52 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகளும், மற்றைய வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளும், அனுர குமார திசாநாயக்க 03 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

223 பேர் வாக்களித்திருந்த நிலையில் அவற்றில் 04 வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நாளையதினம் பாராளுமன்ற வளாகத்தில் பதவியேற்கவுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget