Ads (728x90)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதென ஏகமனதாக தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நேற்று நடத்திய கலந்துரையாடலில் இத்தீர்மானம் ஏகுமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






 

Post a Comment

Recent News

Recent Posts Widget