Ads (728x90)


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று அதிகாலை மாலைதீவை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான அன்ரனோவ்-32 ரக விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதி இன்று அதிகாலை 3 மணியளவில் மாலைதீவின் தலைநகரான மாலேயை சென்றடைந்ததாக பி.பி.சி உலக செய்தி சேவை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் அவரது மனைவி அயோமா ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




 

Post a Comment

Recent News

Recent Posts Widget