Ads (728x90)

அடக்குமுறைக்கு எதிரான மக்கள் பேரணி என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.

இம்மகாநாட்டில் நான்கு அம்ச கோரிக்கைகள் அடங்கிய கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜனநாயக விரோத கைதுகள், கடத்தல்கள் மற்றும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறும், அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட சட்டங்களை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் எனவும், அடிப்படை மனித உரிமைகளை உடனடியாக பாதுகாக்க வேண்டும் எனவும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதன்போது, அடக்குமுறைக்கு எதிராக தேசிய அளவில் கண்டன பேரணியை நடத்தவும் ஒன்றிணைந்த இணக்கப்பாடு எட்டப்பட்டது.



 


Post a Comment

Recent News

Recent Posts Widget