பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் இருந்து வெளியேறிய அவர் தற்போது நாடு திரும்பினால் போராட்டக்காரர்கள் மத்தியில் மீண்டும் எதிர்ப்பலைகளை தூண்டக்கூடும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கை சுமார் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்தியுள்ளது. அத்துடன் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட 21 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது.
எரிபொருள், உணவு மற்றும் உரங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக அடுத்த ஆண்டு 3 பில்லியன் டொலர்களை இலங்கை பெற்றாக வேண்டும்.
அதேநேரம் இலங்கையர்கள் தங்கள் பொருளாதார சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண்பதற்கு சில மாதங்கள் ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment