Ads (728x90)

அடுத்த மாத தொடக்கம் வரை மட்டுமே எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியும். அதன் பின்னர் எரிபொருள் கொள்வனவு தொடர்பில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் எரிபொருளுக்கான செலவு சுமார் 550 மில்லியன் டொலர்களாகும். அவற்றில் வாகனங்களுக்கான எரிபொருள் கொள்வனவுக்கான செலவு 350 - 400 மில்லியன் டொலர்களாகும்.

இதற்கு தேவையான நிதியை இந்தியா அல்லது வேறு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியேற்படுகிறது. எனினும் தற்போது அவ்வாறான நிதியை பெறுவது கடினமானது.

எவ்வாறாயினும் அடுத்த மாத நடுப்பகுதி வரை மட்டுமே மக்கள் குறையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தியா, சீனா அல்லது வேறு எந்த நாடும் சுமார் ஒரு பில்லியன் டொலர்களை வழங்கினால் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு எவ்வித சிக்கலுமின்றி எரிபொருளை வழங்க முடியும். இல்லையெனில் எரிபொருள் நெருக்கடி தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget