அண்மையில் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்றுகூடி அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இவர்களுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் திலின கமகே இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வசந்த முதலிகே, ஜோசப் ஸ்டாலின், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், லஹிரு வீரசேகர, எரங்க குணசேகர ஆகியோருக்கே இவ்வாறு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Post a Comment