Ads (728x90)

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஒசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச செயற்றிறனுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இதற்காக திருகோணமலை எரிபொருள் முனையத்தின் செயற்பாடுகளை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போராட்டங்களைக் கருத்தில் கொண்டு நேற்றும், நேற்று முன்தினமும் லங்கா ஐஒசி நிறுவனம் தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Recent News

Recent Posts Widget