Ads (728x90)

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் எனக் கோரிய மக்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலேயே தொடர்ந்தும் உள்ளனர். கோட்டா கோ கம போராட்டக்களமும் போராட்டக்காரர்களால் நிரம்பியுள்ளது.

நேற்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை மீறி ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றை கைப்பற்றியிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உத்தியோகப்பூர்வமாக பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget