தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக வாரத்தில் 03 நாட்களுக்கு பாடசாலைகளை இயக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அடுத்த வாரம் பாடசாலைகளை திங்கள, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய 03 நாட்களுக்கு இயக்குவது குறித்த அறிவித்தலை கல்வியமைச்சு விடுத்துள்ளது.
இந்த நிலையில் வட மாகாணத்தில் அடுத்த வாரம் முதல் 05 நாட்களும் பாடசாலைகளை இயக்க மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
எனினும் தூரப்பிரதேசங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு வாரத்தில் 03 நாட்களுக்கு மாத்திரம் பாடசாலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாகவும் வட மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment