25 ஆண்டுகளின் பின்னர் தாய்வானுக்கு விஜயம் மேற்கொள்ளும் உயர் அதிகாரத்திலுள்ள சிரேஷ்ட அமெரிக்க அரசியல்வாதியாக அவர் பதிவாகியுள்ளார்.
தாய்வான் தலைநகர் தைபேயில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி சையிங் வென்ஐ, நான்ஸி பெலோசி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தாய்வானை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்ஸி பெலோசி இதன்போது உறுதியளித்துள்ளார். தாய்வானுக்கு அமெரிக்கா வழங்கும் எதிர்பார்ப்புகளற்ற ஒத்துழைப்புகளுக்கு தாய்வான் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.
தாய்வான் ஜனாதிபதியை சந்திக்க முன்னர் சபாநாயகர் நான்ஸி பெலோசி அந்நாட்டின் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
தாய்வானின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும் போது அதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என இந்த சந்திப்பிற்கு முன்னர் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
தாய்வான் தன்னை சுயாதீன அரசாகக் கருதும் நிலையில் சீனா தனது கட்டுப்பாட்டின் கீழுள்ள பிராந்தியமாகவே கருதுகின்றது.
Post a Comment