Ads (728x90)

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,000 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பெருந்தோட்ட நிறுவனங்கள் 1,000 ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget