Ads (728x90)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணைகளில் நேற்று விடுவிக்கப்பட்டார்.  

எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜோசப் ஸ்டாலின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் சமர்ப்பிக்கப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு கோட்டை நீதவான் பிணை வழங்குவதாக அறிவித்தார்.

நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபரை கைது செய்ததாக கொழும்பு கோட்டை பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இந்நிலையில் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவுிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget