Ads (728x90)

அரச ஊழியர்களை இன்று முதல் வழமை போன்று பணிக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. 

இச்சுற்றறிக்கை திறைசேரியின் செயலாளரால் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக சில மாதங்களாக அரச ஊழியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவைக்கு அழைக்கப்பட்டு வந்தனர்.

எனினும் தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் அரசாங்கம்  அரச ஊழியர்களை வழமை போன்று சேவைக்கு அழைக்க தீர்மானித்துள்ளது.





Post a Comment

Recent News

Recent Posts Widget