Ads (728x90)

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு ஆய மூன்று முக்கியமான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் வலிறுத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் ஜனாதிபதியை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

சிவில் மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்பு , பேச்சு சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை வெளிப்படுத்துவது என்பவை தொடர்பிலும் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தியை ஜனாதிபதியிடம் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி, நிலையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget