நேற்று கல்வி அமைச்சர் தலைமையில் கல்வியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலைகளும் வாரத்தின் ஐந்து நாட்களிலும் வழமையான நேரத்தில் அதாவது மு.ப. 7.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை நடைபெறும்.
போக்குவரத்து சிரமம் உள்ள பகுதிகளில் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாகாண அதிகாரிகளுக்கும் அறிவுறுத்துதல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 03 மாதங்களில் பாடசாலை நேரத்தை பாடங்களை கற்பிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதுடன், இணைப்பாட விதானங்கள் மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளை பாடசாலை நேரத்தின் பின்னர் மேற்கொள்ளுவதற்கும், பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களை தொடர்ச்சியாக மட்டுப்படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment