Ads (728x90)

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஜூன் மாதம் 58.9 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. அது ஜூலை மாதத்தில் 66.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

உணவு மற்றும் உணவல்லாப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் இவ்வாறு பணவீக்கம் உயர்வடைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் 75.8 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப்பணவீக்கம் ஜூலை மாதத்தில் 82.5 சதவீதமாகவும், கடந்த ஜூன் மாதம் 43.6 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப்பணவீக்கம் ஜூலையில் 52.4 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

  


Post a Comment

Recent News

Recent Posts Widget