ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது குறித்து அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
மாகாண சபை நிர்வாகம், அபிவிருத்தி மற்றும் மாகாண சபை செலவினங்களை முகாமைத்துவம் செய்யும்போது தேசிய கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க செயற்படுவதைப் போன்று மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதும் மிகவும் முக்கியமானதாகும்.
தமது மாகாணத்தின் அபிவிருத்தியின் முன்னுரிமைகளைக் கண்டறிவதிலும் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் ஆளுநர்கள், அனைத்து மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், ஜனாதிபதி அலுவலகத்துடனும் இணைந்து செயற்பட வேண்டுமென கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment