Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்தின் பாங்கொக் நகரை சென்றடைந்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவி ஆகியோர் மாலைத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றிருந்தனர்.

சுற்றுலா விஸாவில் சிங்கப்பூரில் சுமார் ஒரு மாதம் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஸவின் விஸா காலத்தை நீடிக்க முடியாது என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் கோட்டாய ராஜபக்ஸ தாய்லாந்தின் பாங்கொக் நகரை சென்றடைந்துள்ளார். 

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சு இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மூன்றாவது நாடொன்று கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அடைக்கலம் வழங்கும் வரை அவர் தமது நாட்டில் தங்கியிருக்க முடியும் என தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம் இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget