நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வௌியிடவோ அல்லது அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடவோ கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நிபந்தனையுடனான ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் அவருக்கு 7 வருடங்களுக்கு இலங்கையின் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் கிடையாது.
அதற்கமைய அவருக்கு அரசியல் ரீதியான பதவி வகிக்கவோ, தேர்தலில் போட்டியிடவோ, குடியுரிமை ரீதியாக வாக்களிக்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் தெரிவித்த கருத்துகளுக்காக கடந்த வருடம் ஜனவரி 12 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment