Ads (728x90)

உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 1,000 மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெறும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி ஒரு ஏக்கருக்கும் குறைவான நெல் வயல்களை வைத்திருக்கும் 375,000 விவசாயிகளுக்கு ஒரு விவசாயிக்கு 50 கிலோ வீதம் இலவசமாக இந்த உரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமான பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு நெற்செய்கைக்காக 375,000 யூரியா உர மூடைகளை வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்திருந்ததை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget