Ads (728x90)

இலங்கையில் அமைதி வழி போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளையும், பழிவாங்கல்களையும் 13 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

ஆர்ப்பாட்டங்களை அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் தாம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஜூலை 22 ஆம் திகதி இலங்கை இராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்வோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து அவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழு, இனவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பு, மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை, இலங்கை தொடர்பிலான சர்வதேச செயற்பாட்டுக் குழு, சித்திரவதைக்கு எதிரான சர்வதேச அமைப்பு உள்ளிட்ட 13 மனித உரிமை அமைப்புகள் இணைந்து இந்த கூட்டறிக்கையை வௌியிட்டுள்ளன.

கடந்த ஜூலை 22 ஆம் திகதி கொழும்பு போராட்டக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை இந்த அமைப்புகள் கண்டித்துள்ளன.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் பாதுகாப்பு தரப்பினரை தைரியப்படுத்துவதுடன், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாக 13 சர்வதேச அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.



Post a Comment

Recent News

Recent Posts Widget