Ads (728x90)

போராட்டக்காரர்களுடன் இணைந்து வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலிமுகத்திடல் போராட்டக் குழுவினரின் ஒரு பிரிவினருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெற்றிபெறுவதற்கு போராட்டக்களத்தில் உள்ள அனைத்து இளைஞர், யுவதிகளையும் சகல வழிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும். எனினும் ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறையையும் தாம் எதிர்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட சகல குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான குழுவொன்றை உருவாக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைதியான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக் குழுவினரையும், செயற்பாட்டாளர்களையும் சட்ட விரோதமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ கைது செய்வதைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என போராட்டக் குழுவினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இளம் தலைமுறையினர் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் நாட்டிற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தவே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், அரசியலமைப்பு ரீதியில் சாதகமான பலனைப் பெறுவதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget